இலங்கையில் அமுலாகும் புதிய சட்டம்

போக்குவரத்தின் போது வீதியில் வன்முறையாக நடந்துகொள்ளும் நபர்களைக் கண்டுபிடித்து கைது செய்ய விசேட வடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்காக பொலிஸார் மா அதிபர் சி. டி. விக்கிரமரத்னவின் ஆலோசனையின் பேரில் விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வெலிப்பனையில் மாணவர்களால் ஆசிரியர் ஒருவர் தலைக்கவசத்தால் அடித்துக் கொன்ற சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னரே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கெஸ்பேவ, பொரலஸ்கமுவ மற்றும் பிலியந்தலை பிரதேசங்களில் இவ்வாறானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.